/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு
/
மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு
மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு
மின் இணைப்பு வழங்க லஞ்சம் மின்வாரிய அதிகாரிக்கு 2 ஆண்டு
ADDED : ஆக 28, 2024 08:15 PM
செங்கல்பட்டு:சென்னை பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவர், கடைக்கு மின் இணைப்பு பெறுவதற்காக, பெருங்குடி வடக்கு மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளர் குணசேகரன், 47, என்பவரை, 2013ம் ஆண்டு அனுகினார். அப்போது, கடைக்கு மின் இணைப்பு வழங்க, குணசேகரன் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனுவாசன், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை, சீனுவாசனிடம் கொடுத்து அனுப்பினர்.
அதை, குணசேகரனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்து, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குணசேகரனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.