/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிரம்பி வழியும் 20 ஏரிகள் செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி
/
நிரம்பி வழியும் 20 ஏரிகள் செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி வழியும் 20 ஏரிகள் செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி வழியும் 20 ஏரிகள் செங்கை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஆக 18, 2024 01:02 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 20 ஏரிகள், முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. சில நாட்களாக மழை பெய்ததால், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.
மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில், சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்ததால், அச்சிறுப்பாக்கம், திம்மாவரம், பாக்கம், பருக்கல், பள்ளிப்பேட்டை, ஒரத்துார், மத்துார், ஊனமலை.
கோட்டைப்பூஞ்சை, காட்டூர், ஆத்துார், எடையாளம், விளங்காடு உள்ளிட்ட, 20 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன.மாவட்டத்தில், 26 ஏரிகளில் 99 சதவீதமும், 110 ஏரிகளில் 75 சதவீதமும், 172 ஏரிகளில் 50 சதவீதமும், 205 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளன. ஏரிகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அதேபோல், ஊரக வளர்ச்சித் துறையில், சிறுபாசன ஏரிகள் 620ல், ஒன்பது ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. 75 ஏரிகளில் 93 சதவீதமும், 263 ஏரிகளில் 50 சதவீதமும், 255 ஏரிகளில் 25 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளன.
சிறுபாசன குளங்கள் 2,512ல் 155 குளங்கள் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளன. 287 குளங்களில் 75 சதவீதமும், 713 குளங்களில் 50 சதவீதமும், 1,357 குளங்களில் 25 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன என, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.