/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 232 மாணவர்கள் ஆப்சென்ட்
/
பிளஸ் 2 தமிழ் தேர்வில் 232 மாணவர்கள் ஆப்சென்ட்
ADDED : மார் 03, 2025 11:28 PM
செங்கல்பட்டு, தமிழகம் முழுதும் பிளஸ் 2 தேர்வு நேற்று, துவங்கியது. வரும் 25ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், அரசு மேல் நிலைப்பள்ளிகள் 78, அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகள் 20, மெட்ரிக் மேல் நிலைப்பள்ளிகள் 141 என, மொத்தம் 239 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 85 தேர்வு மையங்கள் அமைக்கபட்டு உள்ளன.
இந்த மையங்களில், பிளஸ் 2 வகுப்பில், 14, 861 மாணவியர், 13, 091 மாணவர்கள் என, மொத்தம் 27,952 மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுத நேற்று காலை 8:30 மணிக்கு, தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்தனர். இதில், 14, 802 மாணவியர், 13, 114 மாணவர்கள் என, 27,916 நேற்று, தேர்வு எழுதினர். 104 மாணவியர், 128 மாணவர்கள் என, 232 மாணவர்கள், தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களில், குடிநீர், மின்சார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு அரசினர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மாணவர்கள் தேர்வு மையத்தை , கலெக்டர் அருண்ராஜ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.