/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் செங்கையில் 237 மனுக்கள் ஏற்பு
/
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் செங்கையில் 237 மனுக்கள் ஏற்பு
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் செங்கையில் 237 மனுக்கள் ஏற்பு
திருநங்கையருக்கு சிறப்பு முகாம் செங்கையில் 237 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 19, 2024 12:11 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கையருக்கான சிறப்பு முகாம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இதில், திருநங்கையருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தர வேண்டும். சுய தொழில் துவங்க வங்கி கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
அதன்பின், இலவச வீட்டுமனை பட்டா கோரி மனுக்கள் அளித்தால், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சுய தொழில் துவங்க, வங்கிகள் வாயிலாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.
இந்த முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, சுய தொழில் துவங்க கடன் உதவி, ரேஷன் கார்டு, முதலைமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 237 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பின், ஒருவருக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.