/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
24 மணி நேரமும் இயங்கும் 'டாஸ்மாக்' பாரத மாதா சாலையில் பெண்கள் தவிப்பு
/
24 மணி நேரமும் இயங்கும் 'டாஸ்மாக்' பாரத மாதா சாலையில் பெண்கள் தவிப்பு
24 மணி நேரமும் இயங்கும் 'டாஸ்மாக்' பாரத மாதா சாலையில் பெண்கள் தவிப்பு
24 மணி நேரமும் இயங்கும் 'டாஸ்மாக்' பாரத மாதா சாலையில் பெண்கள் தவிப்பு
ADDED : செப் 02, 2024 02:07 AM
தாம்பரம்:கிழக்கு தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி - ஜி.எஸ்.டி., சாலைகள் மற்றும் சிட்லப்பாக்கத்தை, பாரத மாதா சாலை இணைக்கிறது. இச்சாலையை ஒட்டி வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன.
முக்கியமான இணைப்பு சாலையாக விளங்கும் இப்பகுதியில், 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் 'குடி'மகன்களால், குடியிருப்புவாசிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தவிர, இச்சாலையில் வரிசையாக தள்ளுவண்டி உணவகங்கள், இறைச்சி கடைகள் நடத்தப்படுவதால், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறியதாவது:
டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் சரக்கு விற்கப்படுவதால், வாகனங்களை சாலையிலும், குடியிருப்பு கேட் முன்பகுதியிலும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.
நடைபயிற்சி செல்ல முடியவில்லை. வீட்டில் இருந்து கார்களை வெளியே எடுக்க முடிவதில்லை.
வாகனங்களை எடுக்க சொன்னால், சாலையில் மது அருந்துவதை தட்டிக் கேட்டால், குடிமகன்கள், போதையில் அநாகரிகமாக பேசுகின்றனர். இதனால், கடைக்கு செல்வதற்குகூட பெண்கள் அச்சப்படுகின்றனர்.
இது தொடர்பாக, தாம்பரம் காவல் ஆணையரகத்திலும், தாம்பரம் மாநகராட்சியிலும் புகார் கொடுத்துள்ளோம். எனினும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.