/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டூ - வீலர் திருடிய 3 பேர் கைது
/
டூ - வீலர் திருடிய 3 பேர் கைது
ADDED : மே 11, 2024 09:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரோம்பேட்டை:குரோம்பேட்டை, சோழவரம் நகரை சேர்ந்தவர் மாதேஷ், 24. இவரது வீட்டு வாசலில் நிறுத்திய டூ - வீலர் மே 6ம் தேதி திருடு போனது. அவர், குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், மூன்று பேர், வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல், துர்கா நகரை சேர்ந்த சுரேஷ், 47, மரியதாஸ், 26, ஆகியோரின் இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, நங்கநல்லுாரை சேர்ந்த மணிகண்டன், கீழ்கட்டளையை சேர்ந்த விவேக் மற்றும் மெக்கானிக் மணிகண்டன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.