/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாய் குறுக்கே புகுந்ததால் விபத்து 2 மாணவியர் உட்பட 3 பேர் பலி
/
நாய் குறுக்கே புகுந்ததால் விபத்து 2 மாணவியர் உட்பட 3 பேர் பலி
நாய் குறுக்கே புகுந்ததால் விபத்து 2 மாணவியர் உட்பட 3 பேர் பலி
நாய் குறுக்கே புகுந்ததால் விபத்து 2 மாணவியர் உட்பட 3 பேர் பலி
ADDED : ஆக 02, 2024 01:16 AM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் தனியார் சட்டக்கல்லுாரியில் நான்கு மற்றும் மூன்றாமாண்டு பயில்வோர் மகாசுவேதா, 21, பவித்ரா, 21, அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால், 21, சென்னையைச் சேர்ந்த சிவா, 23, திருச்சியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன், 23.
நேற்று கல்லுாரி முடிந்ததும், ஐந்து பேரும் கேளம்பாக்கம் - படூர் ஆறுவழிச்சாலையில், 'மாருதி பாலீனோ' காரில் பயணித்தனர். சிவா காரை வேகமாக ஓட்டிச்சென்றார்.
படூர் பாலம் அருகே கார் சென்ற போது, நாய் குறுக்கே ஓடியது. அதன் மீது மோதாமல் இருக்க இடது பக்கம் திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது.
கார் சுக்கு நுாறாக நொறுங்கியதில், மகாசுவேதா, பவித்ரா, லிங்கேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
பலத்த காயமடைந்த சிவா மற்றும் மாணவி கர்லின் பால் ஆகியோரை, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மீட்டு,துரைப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், கர்லின் பால் ஆபத்தான நிலையில் உள்ளார்.
பலியான மூவரின் உடல்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.