/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரத்தில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு
/
தாம்பரத்தில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு
ADDED : செப் 04, 2024 09:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:மேற்கு தாம்பரம், ரமணி நகர், 8வது தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 36. நேற்று முன்தினம் மகனுடன், வீட்டின் அருகேயுள்ள கடைக்கு, மாவு வாங்க சென்றார்.
அப்போது, பின்னால், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கலைச்செல்வியின், மூன்று சவரன் செயினை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினர். தாம்பரம் போலீசார் விசாரிக்கின்றனர்.