/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிழக்கு தாம்பரத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்
/
கிழக்கு தாம்பரத்தில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : மார் 08, 2025 11:39 PM

தாம்பரம், கிழக்கு தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த நபர்களை மடக்கி, பள்ளிக்கரணை மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர்.
இதில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியைச் சேர்ந்த ஜான்சன், 31, காக்கிநாடாவைச் சேர்ந்த பந்தாரு குமார் பாபு, 25, என்பது தெரிய வந்தது. சோதனையில் 30 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது.
இவர்கள், விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மற்றும் மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.