/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த சாலையால் 4 கிராமத்தினர் தவிப்பு
/
சேதமடைந்த சாலையால் 4 கிராமத்தினர் தவிப்பு
ADDED : மார் 02, 2025 11:26 PM

சூணாம்பேடு, சூணாம்பேடு பகுதியில், திண்டிவனம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து புதுப்பேட்டை வழியாக கந்தாடு செல்லும், 6.5 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
வெள்ளங்கொண்டகரம், புதுப்பேட்டை, மண்டகப்பட்டு, கானிமேடு போன்ற கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
தினமும் பள்ளி குழந்தைகள், சூணாம்பேடு பகுதியில் செயல்படும் பள்ளிக்குச் செல்ல, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
மேலும் விவசாயிகள், பொதுமக்கள் என, தினமும் ஏராளமானோர் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ போன்றவற்றில் சூணாம்பேடு, சித்தாமூர், மதுராந்தகம் போன்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கந்தாடு செல்லும் சாலையில், கடந்த ஆறு மாதங்களாக ஜல்லிகள் பெயர்ந்து, பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி, தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.