/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொடர் திருட்டு குற்றவாளி கைது 40 சவரன்; ரூ.2 லட்சம் மீட்பு
/
தொடர் திருட்டு குற்றவாளி கைது 40 சவரன்; ரூ.2 லட்சம் மீட்பு
தொடர் திருட்டு குற்றவாளி கைது 40 சவரன்; ரூ.2 லட்சம் மீட்பு
தொடர் திருட்டு குற்றவாளி கைது 40 சவரன்; ரூ.2 லட்சம் மீட்பு
ADDED : ஜூன் 01, 2024 11:52 PM

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார், மதுராந்தகம், உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், பகல் நேரங்களில் வீடுகளில் திருடு போவது தொடர்ந்து வந்தது.
கடந்த 2022ம் ஆண்டில், மேல்மருவத்துார், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின்படி, அப்பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் கைரேகைகளை பதிவுகளை கொண்டு, மேல்மருவத்துார் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலுார் பகுதியில் உள்ள வீட்டில், நகை திருடு போனது.
அங்கு கைப்பற்றப்பட்ட கைரேகை பதிவுகளை கொண்டு விசாரணை செய்ததில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த காவனுார் புதுச்சேரி, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வினோத், 28, என்பவர் திருட்டில் ஈடுபட்டது உறுதியானது.
அவரை கைது செய்து விசாரித்ததில், இரண்டு ஆண்டுக்கும் மேலாக, மேல்மருவத்துார், மதுராந்தகம், உத்திரமேரூர், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
திருடிய நகைகளை, செங்கல்பட்டு, மதுராந்தகம், உத்திரமேரூரில் உள்ள கடைகளில் அடகு வைத்திருந்தார். அவ்வாறு அடகு வைக்கப்பட்ட 40 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத், சிறையில் அடைக்கப்பட்டார்.