/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஜய் படத்தால் நெரிசல் 40 வாகனங்களுக்கு அபராதம்
/
விஜய் படத்தால் நெரிசல் 40 வாகனங்களுக்கு அபராதம்
ADDED : செப் 05, 2024 09:17 PM
குரோம்பேட்டை:நடிகர் விஜய் நடித்த 'கோட்' திரைப்படம், நேற்று வெளியானது. குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில், இப்படம் பார்க்க, நுாற்றுக்கணக்கான ரசிகர்கள், ஒரே நேரத்தில் குவிந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பலர், கார், இருசக்கர வாகனங்களை, ஜி.எஸ்.டி., சாலையிலேயே நிறுத்தி சென்றனர். இதனால், நெரிசல் மேலும் அதிகரித்தது.
போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, சாலையிலேயே நிறுத்தி நெரிசலை ஏற்படுத்தியதற்காக, கார், இருசக்கர வாகனம் என, 40 வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதன் வாயிலாக 20,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. இதேபோல், தேவி திரையரங்கம் வெளியே சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களுக்கும், போலீசார் அபராதம் விதித்தனர்.