/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை பேரூராட்சியில் ரூ.4.75 கோடி வரி நிலுவை
/
மாமல்லை பேரூராட்சியில் ரூ.4.75 கோடி வரி நிலுவை
ADDED : ஜூலை 09, 2024 06:14 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டிய சொத்து வரி உள்ளிட்டவை, 4.75 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகங்களில், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், இதர கட்டணங்கள் ஆகியவை நிர்ணயித்து வசூலிக்கப்படுகிறது.
பொதுமக்கள் குறித்த காலத்தில் அவற்றை செலுத்த வேண்டும். அதன் வாயிலாக, சாலை அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், தெரு விளக்கு அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்படுகின்றன.
மாமல்லபுரம் பேரூராட்சியில், கடந்த மே மாதம் வரை, சொத்து வரியாக 3.70 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், 12.80 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகியுள்ளது. இன்னும், 3.57 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
அதேபோல், தொழில் வரியாக வசூலிக்க வேண்டிய 9.23 லட்சம் ரூபாயில், 6.48 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலாகி, 2.75 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. குடிநீர் கட்டணமாக வசூலிக்க வேண்டிய 6.89 லட்சம் ரூபாயில், மிக குறைவாக, 36,000 ரூபாய் மட்டுமே வசூலாகி, 6.53 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது.
பிற வகை கட்டணங்களாக வசூலிக்க வேண்டிய 1.08 கோடி ரூபாயில், சொற்ப தொகையாக 3,000 ரூபாய் மட்டும் வசூலாகியுள்ளது. அதனால், வசூலிக்க வேண்டிய மொத்த நிலுவை தொகை, 7.75 கோடி ரூபாய் என, பேரூராட்சி கூட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.