/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கார் விபத்தில் மாணவர்கள் 5 பேர் காயம்
/
கார் விபத்தில் மாணவர்கள் 5 பேர் காயம்
ADDED : ஜூலை 01, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்:போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் பயிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆதர்ஸ், 20, என்பவர், நான்கு நண்பர்களுடன் 'எம்.ஜி., ஹக்டார்' காரில் மாமல்லபுரம் சென்றார்.
அங்கிருந்து, மீனம்பாக்கம் விமான நிலையம் நோக்கி, நேற்று ஓட்டி வந்தார். கட்டுப்பாட்டை இழுந்த கார், துரைப்பாக்கம் — பல்லாவரம் மேம்பாலத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இதில், ஆதர்ஸ், அவரது நான்கு நண்பர்கள் லேசான காயமடைந்தனர். விபத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.