/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைக்கு 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்; நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
/
மழைக்கு 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்; நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
மழைக்கு 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்; நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
மழைக்கு 500 ஏக்கர் நெற்பயிர் சேதம்; நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
ADDED : ஆக 13, 2024 11:04 PM

மதுராந்தகம் : மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 58 கிராமங்களில், தலா 50 முதல் 100 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில், சொர்ணவாரி பட்டத்தில், விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர்.
அவை அனைத்தும், தொடர்ந்து மழை பெய்து, நீர் வந்து கொண்டிருப்பதால், விளை நிலங்களில் பயிர்கள் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒரு சில பகுதிகளில், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி, வெளியேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், முழுமையான பயிர் சேதங்களை கணக்கீடு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மதுார், மொறப்பாக்கம், கூடலுார், காட்டுக்கரணை, அகிலி, கிளியா நகர், களத்துார், கீழ்அத்திவாக்கம், வடமணிப்பாக்கம், தின்னலுார், கொங்கரை மாம்பட்டு, ஆத்துார், தொழுப்பேடு உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் தேங்கி, 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெற்பயிர்கள் முழுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.
மதுராந்தகம் ஒன்றியத்தில், குன்னங்குளத்துார், அத்தியூர், சிதண்டி மண்டபம், சிறுநல்லுார், ஓணம் பாக்கம், கிணார், சூரை, பாக்கம், மதுராந்தகம், மெய்யூர், பிலாப்பூர்உள்ளிட்ட பகுதிகளில், 150 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மதுராந்தகம் வட்டாரத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர் சேதமடைந்துள்ளது.
அதனால், பயிர் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை கணக்கீடு செய்து, அரசிடம் இருந்து உரிய நிவாரணத் தொகை பெற்று தர வேண்டுமென, வேளாண்மை துறை அதிகாரிகளை சந்தித்து, அப் பகுதி விவசாயிகள் நேற்று மனு அளித்தனர்.
இது குறித்து, அச்சிறுபாக்கம் வேளாண் துறை உதவி இயக்குனர் அருள்பிரகாசம் கூறியதாவது:
தென்மேற்கு பருவ மழையால், அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் பயிர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அச்சிறுபாக்கம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த, 200 ஏக்கர் நெல் பயிர், முழுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சிலபகுதிகளில், நெல் பயிர்கள் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் வடிந்த பின், முழுமையான பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.