/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலம்பம், யோகா போட்டியில் 600 வீரர் - வீராங்கனையர்
/
சிலம்பம், யோகா போட்டியில் 600 வீரர் - வீராங்கனையர்
சிலம்பம், யோகா போட்டியில் 600 வீரர் - வீராங்கனையர்
சிலம்பம், யோகா போட்டியில் 600 வீரர் - வீராங்கனையர்
ADDED : பிப் 22, 2025 11:53 PM
சென்னை, சேப்பா அகாடமி மற்றும் சேப்பா டிரஸ்ட், நியூ யங் சோட்டோகான் கரோத்தே டூ பவுண்டேசன் சார்பில், 18வது மாநில அளவிலான போட்டிகள், நேற்று திருநின்றவூரில் உள்ள ஜெயா கல்லுாரி வளாகத்தில் துவங்கின.
இதில், 600 வீரர் - வீராங்கணையர் கராத்தே, சிலம்பம், யோகா ஆகிய போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டன.
சிலம்பத்தில், ஒற்றை கொம்பு, இரட்டை கொம்பு, தொடுமுறை, வாள்வீச்சு உள்ளிட்ட வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 5 - 35 வயதுக்கு உட்பட்ட பல்வேறு பிரிவினருக்கும், 35 வயதுக்கும் மேற்பட்டோருக்கும், தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல், யோகா போட்டியிலும் பல்வேறு பிரிவுகளில் நடந்தன.
போட்டியை, நடிகைகள் நமிதா மற்றும் சுஹாசினி, பவுண்டேஷனின் துணை தலைவர் அஷோக் ஜி லோதா ஆகியோர் துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இன்று, மாநில அளவிலான கராத்தே போட்டி நடக்க உள்ளது.

