/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 620 மனு ஏற்பு
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 620 மனு ஏற்பு
ADDED : ஜூலை 26, 2024 02:31 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் வட்டாரத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம், நேற்று எல்.எண்டத்துார் ஊராட்சியில் துவங்கியது.
இதில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் துரைராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில், பொதுமக்களிடமிருந்து 620 மனுக்கள் வரப்பெற்றன. எல்.எண்டத்துார், கடம்பூர், பெரும்பாக்கம், கிளியா நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, 75க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
திருப்போரூரில் நடந்த முகாமில், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
நெல்லிக்குப்பம், மைலை, கொட்டமேடு உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.