/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெண் கொலை விவகாரம் மேலும் 7 பேர் கைது
/
பெண் கொலை விவகாரம் மேலும் 7 பேர் கைது
ADDED : செப் 01, 2024 03:57 AM
திருப்போரூர : மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் வைஷாலி, 33. அதே பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 35; கிறிஸ்துவ பாதிரியார். இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த தம்பதி இரு ஆண்டுகளுக்கு முன், பொன்மார் அடுத்த மலைத்தெருவில் குடியேறினர். அங்குள்ள கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் 28ம் தேதி கணவன் -- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வைஷாலியை கொலை செய்தார். இதுதொடர்பாக விமல்ராஜை தாழம்பூர் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், விமல்ராஜ், பொன்மார் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும், இவர்கள் மும்பையிலிருந்து போதை மாத்திரைகளை வாங்கி சில கும்பலுடன் சேர்ந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இவை பாதிரியாரின் மனைவி வைஷாலிக்கு தெரிந்ததால், அவரை கொலை செய்ய முடிவு செய்தார். கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த தினேஷ், 23, சந்திரசேகர், 19, அரவிந்த், 23, அஜய், 24, நங்கநல்லூரைச் சேர்ந்த மைக்கேல், 33, பொன்மார் மலைத் தெருவைச் சேர்ந்த சங்கர், 44, ஆகியோர் கொலைக்கு உதவியதாக தெரிந்தது. இந்த ஏழு பேரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.