/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
7,150 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு சுழற்சி முறையில் தேர்வு செய்த அதிகாரிகள்

ADDED : ஏப் 06, 2024 10:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குள், திருப்போரூர், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இதில், 1,932 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள், அந்தந்த சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அவற்றை தேர்தல் சமயத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு, சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி, அனைத்து கட்சியினர் முன்னிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையிலும், தேர்தல் பார்வையாளர் பூபேந்திர சவுத்ரி முன்னிலையிலும் நடந்தது.
அதன்படி, 2,319 மின்னணு ஓட்டு இயந்திரங்களும், 2,319 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,512 'விவிபேட்' எனும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் என, 7,150 இயந்திரங்கள், கணினி மூலம் சீரற்ற முறையில் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் சமயத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப உள்ளனர்.
இதன் மூலம், எந்த ஓட்டுச்சாவடிக்கு எந்த ஓட்டுப்பதிவு இயந்திரம் அனுப்பப்படும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது.