/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெம்மேலி மேஸ்திரி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு
/
நெம்மேலி மேஸ்திரி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு
ADDED : ஏப் 17, 2024 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 48. கட்டட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம், மனைவி மற்றும் உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சென்றார். நேற்று மீண்டும் வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இது குறித்து, கோவிந்தராஜ் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

