/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொதுத்தேர்வு எழுதும் 88,328 மாணவ - மாணவியர் செங்கை மாவட்டத்தில் 274 தேர்வு மையம் தயார்
/
பொதுத்தேர்வு எழுதும் 88,328 மாணவ - மாணவியர் செங்கை மாவட்டத்தில் 274 தேர்வு மையம் தயார்
பொதுத்தேர்வு எழுதும் 88,328 மாணவ - மாணவியர் செங்கை மாவட்டத்தில் 274 தேர்வு மையம் தயார்
பொதுத்தேர்வு எழுதும் 88,328 மாணவ - மாணவியர் செங்கை மாவட்டத்தில் 274 தேர்வு மையம் தயார்
ADDED : மார் 01, 2025 11:38 PM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், 88 ஆயிரத்து 328 மாணவ - மாணவியர் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 274 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில், நான்கு தேர்வு மையங்கள், தனித்தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு முறைகேடுகளை தடுக்க, 123 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுதும், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள், நாளை 3ம் தேதி துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது.
அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வு, வரும் 5ம் தேதி துவங்கி, 27ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 28ம் தேதி துவங்கி, ஏப்., 15ம் தேதி வரையும் நடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் 141 என, மொத்தம் 239 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இவற்றில், பிளஸ் 2 பயிலும் 14 ஆயிரத்து 861 மாணவியர், 13 ஆயிரத்து 91 மாணவர்கள் என, மொத்தம் 27 ஆயிரத்து 952 பேர், பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ் 1 வகுப்பு பயிலும் 15 ஆயிரத்து 722 மாணவியர், 14 ஆயிரத்து 146 மாணவர்கள் என, மொத்தம் 29 ஆயிரத்து 868 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
மாவட்டத்தில், அரசு உயர் நிலைப்பள்ளிகள் 64, அரசு உதவிபெறும் பள்ளிகள் 25, மெட்ரிக் பள்ளிகள் 141 என, மொத்தம் 234 உயர் நிலைப்பள்ளிகள் உள்ளன.
இவற்றில் பயிலும் 15 ஆயிரத்து 74 மாணவியர், 15 ஆயிரத்து 434 மாணவர்கள் என, மொத்தம் 30 ஆயிரத்து 508 பேர், பொதுத்தேர்வு எழுத 'உள்ளனர்.
இதற்காக மாவட்டம் முழுதும், 274 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், 88 ஆயிரத்து 328 மாணவ - மாணவியர் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் எழுத உள்ளனர்.
மாவட்டத்தில், செங்கல்பட்டில் 3 இடங்களிலும், மதுராந்தகத்தில் 1 இடம் என, நான்கு இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 89 பறக்கும் படைகளும், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில், 34 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுத மாணவ, மாணவியர் உரிய நேரத்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல, பேருந்து வசதிகளை விழுப்புரம் போக்குவரத்து கழகம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக மேலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வு மையங்களில் முதலுதவி சிகிச்சை வழங்க, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் இருந்து 16 வழித்தடங்கள், மதுராந்தகம் கல்வி மாவட்டத்தில் இருந்து 5 வழித்தடங்கள் என, 21 வழித்தடங்களில், வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகின்றன.
தேர்வு மையங்களில், அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தெரிவித்துள்ளார்.