/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் பிளஸ் 1 தேர்ச்சி 90.85 சதவீதம் கடந்த ஆண்டைவிட 1.73 சதவீதம் அதிகரிப்பு
/
செங்கையில் பிளஸ் 1 தேர்ச்சி 90.85 சதவீதம் கடந்த ஆண்டைவிட 1.73 சதவீதம் அதிகரிப்பு
செங்கையில் பிளஸ் 1 தேர்ச்சி 90.85 சதவீதம் கடந்த ஆண்டைவிட 1.73 சதவீதம் அதிகரிப்பு
செங்கையில் பிளஸ் 1 தேர்ச்சி 90.85 சதவீதம் கடந்த ஆண்டைவிட 1.73 சதவீதம் அதிகரிப்பு
ADDED : மே 14, 2024 06:48 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 90.85 சதவீதம் மாணவ- - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 1.73 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து, மாநில அளவில் 22வது இடத்தை, செங்கல்பட்டு மாவட்டம் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு வருவாய் மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம் என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. 237 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
பிளஸ் 1 பொது தேர்வில், 28,106 மாணவ - மாணவியர் தேர்வு எழுதினர். இதில், 25,535 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 90.85.
தேர்வு எழுதிய 13,203 மாணவர்களில், 11,505 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 87.14. அதேபோல், 14,903 மாணவியரில், 14,030 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.14.
அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சார்ந்த, 11,487 மாணவ - மாணவியரில், 9,529 பேர் தேர்ச்சி பெற்றனர்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தேர்வு எழுதிய 4,253 பேரில், 3901 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.71.
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய, 12,366 பேரில், 12,105 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.89.
கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 89.86 பெற்று, செங்கல்பட்டு மாவட்டம் மாநில அளவில் 24வது இடம் பெற்றது.
இந்த ஆண்டு, 1.73 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து, 90.85 சதவீதம் பெற்று, மாநில அளவில் 22வது இடம் பெற்ற்ள்ளது என, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நேர்முக உதவியாளர்கள் உதயகுமார், சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, இரும்பேடு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப் பள்ளி ஆகியவை, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.
அரசு உதவிபெறும் பள்ளிகளில், செங்கல்பட்டு புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, செய்யூர் சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. 54 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

