/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 93 பேர் கைது
/
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 93 பேர் கைது
ADDED : ஆக 02, 2024 01:06 AM
திருப்போரூர்:திருப்போரூரில், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், மத்திய அரசை கண்டித்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்போரூர் ராவுண்டானாவில், பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்து இருப்பது கண்டிக்கத்தக்கது என, கோஷம் எழும்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், அங்கிருந்து ஓ.எம்.ஆர்., சாலையில், இந்தியன் வங்கியை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
செல்லும் வழியில், பேருந்து நிலையம் அருகே, அவர்கள் அனைவரையும் திருப்போரூர் போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே, அங்கேயே அமர்ந்து, சாலை மறியல் செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, பெண்கள் உட்பட 93 பேரை, போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர்.