/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
15 வயது சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ
/
15 வயது சிறுமி கர்ப்பம் கணவர் மீது போக்சோ
ADDED : ஜூன் 19, 2024 12:14 AM
மேல்மருவத்துார்:மதுராந்தகம் அடுத்த அருங்குணம் கிராமம், இருளர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 21. இவர், அதே பகுதியைச் சேர்ந்த, அவரது உறவினர் மகளான சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
கடந்த ஓராண்டாக, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், பலமுறை சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்த இரு வீட்டாரும் சேர்ந்து, அவர்களுக்கு கோவிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன்தினம் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து, மருத்துவமனையில் இருந்து மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன்படி மருத்துவமனைக்கு வந்த போலீசார், குழந்தை திருமணம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்து, சக்திவேல் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.