/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
/
மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி
ADDED : ஏப் 22, 2024 04:19 AM
சென்னை : சென்னை, செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பெரியார் நகரில் செயல்படும் அரிசி ஆலையில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், 45, தன் மனைவி கோவிந்தம்மாள், 36, மகன் சிவா, 7, ஆகியோருடன் தங்கி, வேலை செய்து வருகிறார்.
அவர்கள், அங்குள்ள 'ஆஸ்பெட்டாஸ் ஷீட்' கூரை போட்ட வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களது மகன் சிவா, கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
கடும் வெயில் மற்றும் சிமென்ட் கூரை வீட்டில் வசிப்பதால் மகன் சோர்வடைவதாக கருதிய பெற்றோர், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள மருந்தகத்தில், காய்ச்சல் எனக் கூறி மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
நேற்று காலை 9:00 மணியளவில், சிவா சுயநினைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாடியநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கிச் சென்றனர். அங்கு, மருத்துவ பரிசோதனையில், சிறுவன் உயிரிழந்தது தெரிந்தது.
தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

