/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக் - கார் மோதி வாலிபர் பலி
/
மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக் - கார் மோதி வாலிபர் பலி
மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக் - கார் மோதி வாலிபர் பலி
மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக் - கார் மோதி வாலிபர் பலி
ADDED : செப் 03, 2024 04:39 AM
கூடுவாஞ்சேரி, : செம்பாக்கம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிவாஸ், 22. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம், அவரது யமஹா இரு சக்கர வாகனத்தில், கன்னிவாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே சாலையில் கூடுவாஞ்சேரியில் இருந்து கன்னிவாக்கம் நோக்கி, மாருதி ஸ்விப்ட் கார் வந்து கொண்டிருந்தது.
இடையில், சாலையில் குறுக்கே மாடு ஒன்று சென்றதால், மாட்டின் மீது மோதாமல் தவிர்க்க, இருசக்கர வாகனத்தை நிவாஸ் நிறுத்த முயன்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த கார் மீது மோதியது.
மோதிய வேகத்தில் நிவாஸ் துாக்கி வீசப்பட்டு, சாலையில் விழுந்தார். அதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, நிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து, நிவாஸ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.