/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டும் குழியுமான சாலை தென்னேரிப்பட்டில் அவதி
/
குண்டும் குழியுமான சாலை தென்னேரிப்பட்டில் அவதி
ADDED : ஆக 05, 2024 12:50 AM

சித்தாமூர்::சித்தாமூர் அருகே கல்பட்டு ஊராட்சிக்குட்பட்ட தென்னேரிப்பட்டு கிராமத்திற்கு செல்லும் தார் சாலையை, சின்னக்களக்காடி, வேலுார், கல்பட்டு, தென்னேரிப்பட்டு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த சாலை, கடந்த 20 ஆண்டுகளாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்து உள்ளதால், தினசரி அந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும், தெரு விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.