/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் தீப்பற்றி சரக்கு வாகனம் நாசம்
/
சாலையில் தீப்பற்றி சரக்கு வாகனம் நாசம்
ADDED : ஜூன் 28, 2024 02:07 AM

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த ஜமீன்எண்டத்துார் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 34. இவர், மதுராந்தகத்தில் செயல்படும் பாத்திரக்கடையில், சரக்கு வாகன ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மதியம், மதுராந்தகத்தில் இருந்து சித்தாமூர் நோக்கி, சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பொலம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, வாகனத்தில் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. அதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், சாலையோரத்தில் சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு, மதுராந்தகம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், சரக்கு வாகனத்தின் முன்பக்கம் முழுதும் தீயில் எரிந்து நாசமானது.
சித்தாமூர் போலீசார்,தீ விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.