/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் மீது வழக்கு
/
மதுராந்தகத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் மீது வழக்கு
மதுராந்தகத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் மீது வழக்கு
மதுராந்தகத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் மீது வழக்கு
ADDED : ஏப் 17, 2024 10:15 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ரேஷன் கடை பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று வாலிபர்களை, நேற்று மதுராந்தகம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுராந்தகம் அடுத்த மேடவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய், 21, செல்லமுத்து, 22, மற்றும் முடையூர் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, 22, ஆகியோர், மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ரேஷன் கடை பகுதியில், கஞ்சா விற்பனை செய்து வருவதாக, மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி அப்பகுதிக்கு சென்ற போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.