/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லாரி ஏறி இறங்கியதில் கல்லுாரி மாணவர் பலி
/
லாரி ஏறி இறங்கியதில் கல்லுாரி மாணவர் பலி
ADDED : ஆக 26, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் நவீன்குமார், 20: கல்லுாரி மாணவர். இவர், நேற்று முன்தினம், மதுராந்தகத்தில் இருந்து, 'ஹோண்டா சைன்' பைக்கில், தந்தை கண்ணனை அழைத்துக் கொண்டு படாளம் சென்றார்.
பின், தந்தையை இறக்கி விட்டு, மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்தார். படாளம் லாரி பார்க்கிங் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில், பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படாளம் போலீசார் விசாரிக்கின்றனர்.