/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்
/
அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்
அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்
அனுமதியின்றி மரம் வெட்டிய நபர் மீது கூவத்துாரில் புகார்
ADDED : செப் 01, 2024 11:44 PM

கூவத்துார் : கூவத்துார் அடுத்த சீக்கனாங்குப்பம் கிராமத்தில், புல எண் 6/1ல், பெரிய ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதி உள்ளது. இப்பகுதியில், ஏராளமான பென்சில் மரங்கள் உள்ளன.
நேற்று, சீக்கனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ரவி, 35, என்பவர், எந்தவித அனுமதியும் இன்றி, அரசு நீர்நிலைப் புறம்போக்கு இடத்தில் இருந்த, 3,000 கிலோ எடை கொண்ட பென்சில் மரங்களை வெட்டினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தி, வெட்டப்பட்ட மரங்களை பறிமுதல் செய்தனர்.
அதோடு, அனுமதியின்றி மரம் வெட்டிய ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, கூவத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.