/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீரழிந்துவரும் சுகாதார வளாகம் தொண்டமநல்லுாரில் அவதி
/
சீரழிந்துவரும் சுகாதார வளாகம் தொண்டமநல்லுாரில் அவதி
சீரழிந்துவரும் சுகாதார வளாகம் தொண்டமநல்லுாரில் அவதி
சீரழிந்துவரும் சுகாதார வளாகம் தொண்டமநல்லுாரில் அவதி
ADDED : ஏப் 17, 2024 10:44 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே உள்ள தொண்டமாநல்லுார் ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசிக்கின்றனர். அவர்கள், இயற்கைஉபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதை தவிர்க்கும் விதமாக,அங்கன்வாடி மையம் அருகே, பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
சில ஆண்டுகளாக,சரியான பராமரிப்புஇல்லாமல், சுகாதார வளாகம் முழுதும் புதர்மண்டி சீரழிந்து கிடக்கிறது.அதனால், சுகாதார வளாகத்தை பயன்படுத்த மக்கள் விருப்பம் காட்டவில்லை.
தற்போது, அப்பகுதிமக்கள் இயற்கை உபாதைகளை திறந்தவெளியில் கழிப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர். எனவே, துறை சார்ந்தஅதிகாரிகள் பொது சுகாதாரவளாகத்தை சீரமைத்து,மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர் பார்க்கின்றனர்.