/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மேம்பாலத்தில் உரசிய லாரி டேங்க் உடைந்து ஆறாக ஓடிய டீசல்
/
செங்கை மேம்பாலத்தில் உரசிய லாரி டேங்க் உடைந்து ஆறாக ஓடிய டீசல்
செங்கை மேம்பாலத்தில் உரசிய லாரி டேங்க் உடைந்து ஆறாக ஓடிய டீசல்
செங்கை மேம்பாலத்தில் உரசிய லாரி டேங்க் உடைந்து ஆறாக ஓடிய டீசல்
ADDED : ஜூலை 04, 2024 12:45 AM

செங்கல்பட்டு:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து திருப்போரூருக்குகெமிக்கல் மூட்டைகள்ஏற்றிய சரக்கு லாரிவந்தது.
திருப்போரூரில் தொழிற்சாலையில் கெமிக்கல் மூட்டைகளை இறக்கிய பின், நேற்று முன்தினம் இரவு, லாரி திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையில், ராணிப்பேட்டை நோக்கி சென்றது.
லாரியை, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார், 58, என்பவர் ஓட்டினார். செங்கல்பட்டு அருகில், வல்லம் ரயில்வே மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் லாரி திரும்பிய போது, மேம்பால தடுப்பு சுவரில் லாரியின் டீசல் டேங்க் மோதி உடைந்தது.
இதில், மேம்பாலம் முழுதும் டீசல் ஆறுபோல ஓடியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தசெங்கல்பட்டு நகர போலீசார், மேம்பாலத்தில்டீசல் பரவி இருந்தஇடத்தில், பின்னால்வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்க, மணல் கொட்டி தடுப்பு அமைத்தனர்.
பின், விபத்து குறித்து, டிரைவர் ஜெயக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.