/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீஸ் ஏட்டை தாக்கியோருக்கு வலை
/
போலீஸ் ஏட்டை தாக்கியோருக்கு வலை
ADDED : ஆக 07, 2024 02:23 AM
மறைமலை நகர்,
செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்அன்புராஜ், 42. மறைமலை நகர் போக்குவரத்து பிரிவில், ஏட்டுவாக உள்ளார். கடந்த 4ம் தேதி, விஜய்அன்புராஜ் ஆத்துார் தென்பாதி கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றார்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த மகேஷ் மற்றும் சிவா ஆகியோர், இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றுள்ளனர்.
இதை, விஜய்அன்புராஜ் தட்டிக் கேட்டுள்ளார். இதையடுத்து சிவா, மகேஷ் இருவரும், அவர்களின் நண்பர்களான அபிஷேக், பிரேம், மனோஜ் ஆகியோருடன் சென்று, விஜய்அன்புராஜை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.
விஜய் அன்புராஜ் புகாரின் படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, ஐந்து பேரையும் தேடிவருகின்றனர்.