/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடற்கரை கோவில் வளாகத்தில் தயாராகும் புதிய புல்வெளி
/
கடற்கரை கோவில் வளாகத்தில் தயாராகும் புதிய புல்வெளி
கடற்கரை கோவில் வளாகத்தில் தயாராகும் புதிய புல்வெளி
கடற்கரை கோவில் வளாகத்தில் தயாராகும் புதிய புல்வெளி
ADDED : ஆக 15, 2024 11:45 PM

மாமல்லபுரம்,:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடைவரைகள் ஆகியவற்றை, சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். தொல்லியல் துறை அவற்றை பாதுகாத்து பராமரிக்கிறது.
சிற்ப வளாகத்தில் பசுமை சூழல் கருதி, அத்துறை பரந்த புல்வெளி அமைத்து பராமரிக்கிறது. நாளடைவில், புற்கள் அடர்ந்து, களை அதிகரிக்கும்போது, அதில் பூச்சிகள் பெருகும்.
இதை தவிர்க்க, அவ்வப்போது புற்களின் முனை பகுதி வெட்டி அகற்றப்படும். நீரின்றி அல்லது வேறு காரணங்களால் புற்கள் கருகினால், புதிதாக புற்கள் நட்டு புல்வெளி ஏற்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு, ஜி - 20 நாடுகளின் பிரதிநிதிகள் சிற்பங்களை பார்வையிட்டபோது, பெங்களூருவிலிருந்து கொரியன் புற்கள் கொண்டுவரப்பட்டு, புதிய புல்வெளி உருவாக்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டு கடந்த நிலையில், கடற்கரை கோவில் வளாக புல்வெளி கருகியது. மீண்டும் புதிதாக ஏற்படுத்த முடிவெடுத்து, அதை அழித்து, புதிய புற்கள் நடுவதற்காக, ஊழியர்கள் புல்வெளி பரப்பை உழுது பராமரித்துள்ளனர்.
வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் இருந்த புல்வெளியில் பயணியர் அமர்ந்து இளைப்பாறுகின்றனர். குழந்தைகள் விளையாடுகின்றனர். விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்படுவதை தவிர்க்க, களை புற்களை அகற்றி பராமரிக்கப்பட்டது.