/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை கடக்க முயன்றவர் அரசு பேருந்து மோதி பலி
/
சாலையை கடக்க முயன்றவர் அரசு பேருந்து மோதி பலி
ADDED : ஜூலை 23, 2024 01:34 AM
கூவத்துார், கூவத்துார் அடுத்த சீக்கனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன், 49. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் தெருக்கூத்து நடந்துள்ளது.
தெருக்கூத்து பார்த்து விட்டு, வீரப்பன் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது, சீக்கனாங்குப்பம் சாலை சந்திப்பு அருகே கிழக்கு கடற்கரை சாலையை கடந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பேருந்து, வீரப்பன் மீது மோதியது.
அதில் பலத்த காயம் ஏற்பட்டு, வீரப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதையடுத்து, சம்பவஇடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார், வழக்குப்பதிந்து வீரப்பன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.