/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தென்னை மரம் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி
/
தென்னை மரம் ஏறியவர் மின்சாரம் பாய்ந்து பலி
ADDED : ஆக 24, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்:செய்யூர் அடுத்த ஓதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 63; கூலித்தொழிலாளி. நேற்று காலை 8:45 மணிக்கு அவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது, அருகே இருந்த உயரழுத்த மின்கம்பி மீது தென்னங்கீற்று பட்டதால், மின்சாரம் பாய்ந்து மரத்தில் இருந்து சேகர் கீழே விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சேகரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின், செய்யூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.