/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமம்: வேடந்தாங்கலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
/
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமம்: வேடந்தாங்கலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமம்: வேடந்தாங்கலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமம்: வேடந்தாங்கலுக்கு ரூ.10 லட்சம் பரிசு
UPDATED : ஆக 16, 2024 06:12 AM
ADDED : ஆக 15, 2024 11:53 PM

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, வேடந்தாங்கல் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்டு, சித்தாத்துார், துறையூர், விநாயகநல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், 1,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
தீண்டாமை கடைப்பிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும் ஆதிதிராவிடர் கிராமமாக வேடந்தாங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நல இயக்குனரகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. அதன்படி, அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில், தீண்டாமை கடைப்பிடிக்காத, நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்திற்கு பரிசு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், 2023 -- 24ல், வேடந்தாங்கல் ஊராட்சிக்கு, மத்திய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன், 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு, குடிநீர் வசதி செய்தல் மற்றும் மேம்படுத்துதல், பாதை வசதி மேம்பாடு செய்தல், பள்ளி கட்டடம் சீரமைத்தல், கால்நடை தண்ணீர் தொட்டி கட்டுதல், பள்ளி மற்றும் குழந்தைகள் நல மைய கட்டடம் கட்டுதல் மற்றும் புதிய விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ள, ஊராட்சி நிர்வாகத்திற்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமமாக, வேடந்தாங்கல் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து, வேடந்தாங்கல் ஊராட்சி மக்களுக்கு, நேற்று நடந்த சுதந்திர தின விழா கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் வேதாசலம் மற்றும் ஊராட்சி செயலர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

