/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டுதேவத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டுகோள்
/
காட்டுதேவத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டுகோள்
காட்டுதேவத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டுகோள்
காட்டுதேவத்துார் ஏரி உபரிநீர் கால்வாயில் தடுப்பணை அமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 11, 2024 12:39 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே காட்டுதேவத்துார் கிராமத்தில், 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 500 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. இந்த ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
காட்டுதேவத்துார் ஏரியில் இருந்து, கலங்கல் வாயிலாக வெளியேறும் உபரி நீர், கால்வாய் வழியாக விளங்கனுார், குருவாபதன்மேடு, ஓணம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக சென்று, இரும்பேடு ஏரிக்கு செல்கிறது.
ஏரி நீர் மற்றும் உபரி நீர் கால்வாய் வாயிலாக, 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்ப்பாசனம் பெறுகின்றன. ஏரி உபரிநீர் கால்வாய், பல ஆண்டுகளாக துார் வாரி சீரமைக்கப்படவில்லை.
அதனால், செடி, கொடிகள் வளர்ந்து, மழைக் காலங்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் சென்று பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்துள்ளன.
கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, போதிய தண்ணீ்ர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைத்து, கால்வாய் நடுவே தடுப்பணை அமைத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என , அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

