/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
/
கருங்குழி அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
கருங்குழி அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
கருங்குழி அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 01, 2024 11:55 PM

மதுராந்தகம் : கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 9வது வார்டு பகுதியில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர்.
அங்கன்வாடி மையம் அமைந்துள்ள கட்டடத்திற்கு பின்புறம், பேரூராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. அங்கன்வாடி மையத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், குளத்துப் பகுதியில் இருந்து வரும் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.அங்கன்வாடி மைய வளாகத்தினுள் புற்கள் வளர்ந்து, புதர் மண்டி உள்ளது.
இது குறித்து, ஒன்பதாவது வார்டு கவுன்சிலர், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன் கருதி, மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.