/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாகனங்கள் தொடர் மோதல் அச்சிறுபாக்கத்தில் விபத்து
/
வாகனங்கள் தொடர் மோதல் அச்சிறுபாக்கத்தில் விபத்து
ADDED : மே 02, 2024 01:32 AM

அச்சிறுபாக்கம்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி, 40, என்பவர், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி, மாருதி எர்டிகா காரை ஓட்டிச் சென்றார்.
அப்போது, அச்சிறுபாக்கம் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவேரி காம்ப்ளக்ஸ் எதிரே, நேற்று பயணியர் சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர்.
அப்போது, சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, இடது புறமிருந்து திடீரென வலதுபுறமாக சாலையில் ஏறிச் சென்றது.
இதனால், காரின் வேகத்தை குப்புசாமி குறைத்ததால், காரின் பின், சென்னைக்கு ஸ்பிரீட் ஏற்றி வந்த டேங்கர் லாரி, காரின் பின்பக்கம் மோதியது.
இதில், அரசு பேருந்தும், டேங்கர் லாரியின் பக்கவாட்டில் உரசி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பேருந்து பயணியர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அச்சிறுபாக்கம் போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
பின், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தினால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

