/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அழிவின் விளிம்பில் வண்டலுார் தாங்கல் ஏரி பசுமை பூங்கா அமைக்க வலுக்கும் கோரிக்கை
/
அழிவின் விளிம்பில் வண்டலுார் தாங்கல் ஏரி பசுமை பூங்கா அமைக்க வலுக்கும் கோரிக்கை
அழிவின் விளிம்பில் வண்டலுார் தாங்கல் ஏரி பசுமை பூங்கா அமைக்க வலுக்கும் கோரிக்கை
அழிவின் விளிம்பில் வண்டலுார் தாங்கல் ஏரி பசுமை பூங்கா அமைக்க வலுக்கும் கோரிக்கை
ADDED : மார் 03, 2025 11:31 PM

வண்டலுார், வண்டலுார் தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி, ஆகாயதாமரை படர்ந்து, குப்பை கழிவுகள் சூழ்ந்து, எவ்வித பராமரிப்பும் இன்றி அழிவின் விளிம்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை துார்வாரி, மக்கள் பொழுது போக்க பசுமை பூங்கா அமைத்திட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி 899.90 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்கு 15 வார்டுகளில், 232 தெருக்களில், 40,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு, வாலாஜாபாத் சாலை ஓரம், 8 ஏக்கர் பரப்பில் தாங்கல் ஏரி உள்ளது. பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரியை நம்பி, 500 ஏக்கர் பரப்பில் முன் விவசாயம் நடந்தது.
நகர மயமாக்கலால், கடந்த 20 ஆண்டுகளில் ஏரியை சுற்றி ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தன. தவிர, குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, கழிவு நீர் கலந்து, ஆகாயதாமரை படர்ந்து, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வண்டலுாரில் 40, 000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்தாலும், பெண்கள், குழந்தைகள் பொழுது போக்க, நடைபயிற்சி செய்ய உகந்த இடம் இல்லை. இதனால், அருகில் உள்ள பெருங்களத்துார், மண்ணிவாக்கம் பகுதிகளில் உள்ள மைதானம், பூங்காவில் நடை பயிற்சி செய்ய வேண்டி உள்ளது.
வண்டலுார் தாங்கல் ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைத்து, பசுமை பூங்கா அமைத்தால், இப்பகுதி மக்களின் சிறந்த பொழுது போக்கு இடமாக மாறும். தவிர, ஏரியும் பாதுகாக்கப்படும்.
ஏரியை சுற்றி தொடர் ஆக்கிரமிப்பு நடப்பதாலும், ஊராட்சி நிர்வாகமே குப்பை கொட்டும் இடமாக இதைப் பயன்படுத்துவதாலும், ஏரியின் இயல்பு தொடர்ந்து மாசடைந்து வருகிறது. தவிர, கழிவு நீரும் தாராளமாய் கலக்கிறது. இதே நிலை நீடித்தால், அடுத்த 10 ஆண்டுகளில் இப்படி ஓர் ஏரி இருந்த அடையாளமே இல்லாமல் போகும்.
எனவே, அழிவின் விளிம்பில் உள்ள இந்த தாங்கல் ஏரியை துார்வாரி, ஆக்கிரமிப்பை அகற்றி, சுற்றிலும் நடை பயிற்சி செய்ய பாதை அமைத்து, பெண்கள், குழந்தைகள், முதியோர் பொழுது போக்க, பசுமைப் பூங்கா அமைத்திட, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.