/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீரமைப்பு பணி முடிவதற்குள் உடைந்து தொங்கும் ஊஞ்சல் சிட்லபாக்கம் ஏரி பூங்காவில் அவலம்

ADDED : ஜூலை 10, 2024 12:25 AM

சிட்லப்பாக்கம்:தாம்பரம் மாநகராட்சி சிட்லபாக்கத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 102 ஏக்கர் பரப்புடைய ஏரி உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஏரி பாதியாக சுருங்கியதோடு, கழிவுநீர் கலப்பால், தண்ணீர் மாசடைந்து, சுற்றியுள்ள பகுதிகளின் நிலத்தடிநீர் மாசடைந்தது.
இதற்கு தீர்வாக, சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஏரி சீரமைப்பு பணி 2019ல் துவங்கியது. கழிவுகள் வெளியேற்றப்பட்டு, துார்வாரி ஆழப் படுத்தப்பட்டது.
கான்கிரீட் கற்களால் கரை பலப்படுத்தப்பட்டு, நடைபாதை அமைக்கப்பட்டது. கரையில், 32 லட்சம் ரூபாய் செலவில் சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
இந்த ஏரிக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து, நேரத்தை செலவிட்டு செல்கின்றனர். குறிப்பாக, சிறுவர்கள், அங்குள்ள விளையாட்டு திடலில் விளையாடி மகிழ்கின்றனர்.
இந்நிலையில், பூங்காவில் உள்ள ஊஞ்சல் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் தொங்குகிறது.
ஏரி சீரமைப்பு பணிகள்முழுமையாக முடியாத நிலையில், அதற்குள்ஊஞ்சல் உடைந்து தொங்கு வது, விளையாட்டுஉபகரணங்கள் தரமானதாக இல்லை என்பதை வெளிச்சம் போட்டுகாட்டுவதாக உள்ளது.
ஆரம்பத்திலேயே இந்த நிலை என்றால், இன்னும் சில மாதங்களில் அனைத்து உபகரணங்களும் உடைந்து பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்என்ற கோரிக்கைஎழுந்துள்ளது.