/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதகு நீரில் தவறி விழுந்து வாலிபர் பலி
/
மதகு நீரில் தவறி விழுந்து வாலிபர் பலி
ADDED : ஆக 27, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சதுரங்கப்பட்டினம் : கல்பாக்கம் அடுத்த வாயலுார் தண்ணீர்பந்தல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன், 34. கூலித் தொழிலாளி. திருமணமாகாதவர்.
இவர், நேற்று காலை 5:00 மணிக்கு, வாயலுார் பகுதியில் புதிதாக அமைக்கப்படும் புதுச்சேரி சாலையில் உள்ள வாய்க்கால் மதகு நீர் தேக்கத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து, அர்ஜுனனின் தந்தை சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.