/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'லிப்ட்' கொடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
/
'லிப்ட்' கொடுத்த வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூன் 30, 2024 10:55 PM
சென்னை: சென்னை மேடவாக்கம், குட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 27; இவர், நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில், ஓட்டேரி அடுத்த பனந்தோப்பு ரயில்வே காலனி மைதானம் வழியாக, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த இருவர், அவரிடம் 'லிப்ட்' கேட்டனர். அவரும், அவர்களுக்கு உதவ, தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டார். ரயில்வே காலனி மைதானம் அருகே இறங்கிய இருவரும், அவரிடம் பணம் கேட்டனர்.
அவர் கொடுக்க மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த இருவரும், தங்களிடம் இருந்த கத்தியால், அவரை வெட்டினர்.
அதன் பின் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.