/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் 636 கிராமங்களில் துவக்கம்
/
ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் 636 கிராமங்களில் துவக்கம்
ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் 636 கிராமங்களில் துவக்கம்
ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் 636 கிராமங்களில் துவக்கம்
ADDED : மே 03, 2024 11:14 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 636 வருவாய் கிராமங்களில், ஒரு கிராமம்; ஒரு பயிர் திட்டம் துவக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒரு கிராமம்; ஒரு பயிர் என்ற புதிய திட்டம், 636 வருவாய் கிராமங்களில் துவக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில், அனைத்து உதவி வேளாண்மை அலுவலர்களுக்கும், வருவாய் கிராமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை, அப்பகுதியில் அதிக அளவில் சாகுடி செய்யப்படும் பயிரின் செயல் விளக்கத் திடல் அமைக்கப்படும்.
இந்த செயல் விளக்க திடலில், விவசாயிகளுக்கு தேவையான பயிர் சாகுபடி, தொழில்நுட்பங்கள், நிலம் தயாரிப்பு, உயர் விளைச்சல் ரகங்கள் பயன்பாடு, விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த பூச்சி போன்ற அனைத்து இனங்களிலும் தெரிவுபடுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
இதன் வாயிலாக, 15 - 20 சதவீத கூடுதல் மகசூல் பெறுவது உறுதி செய்யப்படும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள், கடன் உதவி மற்றும் பயிர் காப்பீடு போன்றவற்றை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் பரப்புள்ள நிரந்தர வயல் அமைக்கப்பட்டு, பூச்சிகள் மற்றும் நோய்கள் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.