/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழைய கட்டடத்தில் இயங்கும் கிணார் நியாய விலை கடை
/
பழைய கட்டடத்தில் இயங்கும் கிணார் நியாய விலை கடை
ADDED : செப் 09, 2024 06:32 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில், கிணார் ஊராட்சி உள்ளது. அங்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.
தற்போது, பழைய கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மழை காலங்களில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை, இங்கு பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.
கடையின் முன்புறம் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே, நியாய விலை கடையை, தற்போதைக்கு வேறு இடத்திற்கு மாற்றி, பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.