/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்
/
இரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்
ADDED : மே 04, 2024 09:54 PM
சென்னை:கொளத்துாரைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மனைவி மாலதி, 36. இவர், டீச்சர்ஸ் காலனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
கடந்த 3ம் தேதி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக செஞ்சி சென்றிருந்தார்.
அடுத்த நாளான 4ம் தேதி நள்ளிரவு, சென்னை செந்தில் நகர் பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கி, விவேகானந்தர் பிரதான சாலை வழியே வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இருவர், மாலதியின் செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்த மாலதி, செயினை கெட்டியாக பிடித்துக் கொண்டதுடன் திருடர்களையும் பிடிக்க முற்பட்டார். ஆனாலும், திருடர்கள் கையில் கிடைத்த அரை சவரன் செயினை அறுத்து, பைக்கில் சிட்டாய் பறந்தனர்.
மாலதி அளித்த புகாரையடுத்து, ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.