/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிடப்பில் போடப்பட்ட நடுவக்கரை சாலை அமைப்பு
/
கிடப்பில் போடப்பட்ட நடுவக்கரை சாலை அமைப்பு
ADDED : ஜூலை 09, 2024 06:07 AM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியில், நெரும்பூர் சாலையிலிருந்து, இருளர் குடியிருப்பு பகுதி வரை, 2 கி.மீ., சாலை உள்ளது. அப்பகுதியினர் இதன் வழியில் தினமும் செல்கின்றனர்.
சாலையின் இறுதி பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு, தொழிலாளர்கள் செல்கின்றனர். இந்த சாலை சீரழிந்த நிலையில் இருந்ததால், அதை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
புதிய சாலை அமைக்க, எட்டு மாதங்களுக்கு முன் ஜல்லிக்கற்கள் நிரவி, பின் சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இப்பகுதியினர் இருசக்கர வாகனம் ஓட்டவும், நடக்கவும் இயலாமல்சிரமப்பட்டது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது சாலை அமைக்கப்பட்டதாக, அப்பகுதியினர் மகிழ்ச்சியுடன்தெரிவித்தனர்.