/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'ஏசி' பழுது ரயில் பயணியர் வாக்குவாதம்
/
'ஏசி' பழுது ரயில் பயணியர் வாக்குவாதம்
ADDED : ஜூலை 11, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:சென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ராமேஸ்வரம் விரைவு ரயில், எழும்பூரில் மாலை புறப்பட்டது.
ரயில் புறப்படும் போதே 'பி1' பெட்டியில் ஏசி வேலை செய்ய வில்லை. ஜன்னல்களையும் திறக்க முடியாததால், புழுக்கத்தில் பயணியர் கடும் அவதி அடைந்தனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இரவு 8:17 மணிக்கு வந்தபோது, ரயில்வே ஊழியர்களிடம், பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, 'ஏசி' பழுதை நீக்கினர். இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.